நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.
ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.
இன்போசிஸ் பங்குகள் வியாழக்கிழமை தொடக்க அமர்வில் மும்பை பங்குச் சந்தையில் 1% உயர்ந்து ₹1,898 ஆக வர்த்தகமானது, தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனமான இன்போசிஸ் அதன் வருவாய் வரம்புகளை உயர்த்தி இருக்கிறது, 2022 மார்ச் இறுதி நிதியாண்டில் 19.5% - 20% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்க்கிறது, முந்தைய காலாண்டின் 16.5% - 17.5% உடன் ஒப்பிடுகையில், அதன் ஆப்பரேசஷனல் லாப வரம்பைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹5,197 ஆக இருந்த Q3-FI22 இல் 12% ஒருங்கிணைந்த நிகர இலாபமாக ₹5,809 கோடி அளவை எட்டியிருக்கிறது, அதன் வருவாய் 23% உயர்ந்து ₹31,867 கோடியாக உயர்ந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.