உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
முதலீட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, பலவீனமான சந்தைகள் ஒரு முதலீட்டாளருக்கு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதற்கும் நீண்ட காலத்திற்கு அதிக லாபத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.