இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சொத்தான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாலும், நேரம், மற்றும் ஆயத்த பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதாலும் அதன் ஐபிஓவை நடப்பு நிதியாண்டில்...