Microsoft என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். நுகர்வோர் மின்னணுவியல், கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் தயாரிப்பு மற்றும் கணினி தொடர்பான சேவைகளை உற்பத்தி செய்து வருகிறது.
மைக்ரோசாப்ட் கேமிங் டெவலப்பர், ஆக்டிவிஷன் ப்ளிஸார்டை 69 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியதை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் புதன்கிழமை விமர்சித்தார். ஏழை நாடுகள் கடன்களை மறுசீரமைக்கவும், COVID-19 மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் இது தேவையா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான...