பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், Reliance Industries நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராக உள்ளது.
வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய போட்டி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் விளம்பரதாரராக(Sponser) Paytm நிறுவனம் உள்ளது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு Paytm ஒரு சலுகையை அறிவித்து, இன்ப அதிரச்சியை கொடுத்துள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் (India Posit Payments Bank) வங்கியில் ஏராளமானவர்கள் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கும்போது, இரண்டு கணக்குகளையும் மூடு முடியும். இந்நிலையில், IPPB பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.