இந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரும்பாலும் போலியான இன்வாய்ஸ்கள் மற்றும் மோசடி உள்ளீட்டு வரிக் கடன் கோரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை வரி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் ஜனவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளன என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 9, 2020 முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், இயக்குநரகம் மூலம் இதனை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் பல்வேறு மத்திய ஜிஎஸ்டி அமைப்புகளின் மூலம் சுமார் 40,000 கோடி ரூபாய் தொடர்புடைய 5,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் 'பி' குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 58,349.37 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 55.44 புள்ளிகள் அதிகரித்து 557,849.76 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 40.54 புள்ளிகள் அதிகரித்து 17,244.50 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 50.80 புள்ளிகள் அதிகரித்து 35,114.40 ஆக வர்த்தகமானது.