உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்ற..இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனால், மே 12-ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்து வருவதால் இரண்டு ஆலைகளிலும் நியான் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.