கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உலக நாடுகள் சில ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
பங்குச் சந்தை அமைப்பான செபியிடம் மாருதி சுசுகி நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி மாதத்தில் 1,69,692 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது 2021-ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 1,68,180 யூனிட்களாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் குழுவுக்கு மார்ச் 1-ஆம் தேதி அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், பாரத்பேயின் முதலீட்டாளர்களும் வாரியமும் நிறுவனர்களை 'அடிமைகளாக' நடத்துவதாகவும், 'தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிறுவனர்களை நீக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியாவின் புதிய தலைவராக கிறிஸ்டியன் ஷென்க்கை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் நியமித்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் அரோரா பிராண்டின் நிர்வாக இயக்குநராக நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 24,435 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 30,779 கோடியாகவும், சர்வதேச சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.67,471 கோடியாகவும் இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.