உள்நாட்டில். கடந்த 2021-ம் ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, பாமாயில்(Palm Oil) மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது குறைத்து வந்தது.
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
1938-ம் ஆண்டு ஜுலை மாதம் 10-ம் தேதி பிறந்த ராகுல் பஜாஜ், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றி பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். மேலும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.