முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது.
Zee Entertainment நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை Invesco Developing Markets வைத்துள்ளது. இந்நிலையில், இன்வெஸ்கோ டெவலப்பிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், சோனியுடனான Zee இணைப்பை ஆதரித்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.