இன்று காலை 11.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,982.46 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 332.88 புள்ளிகள் குறைந்து 57,158.63 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 147.55 புள்ளிகள் குறைந்து 17,001.55 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 349 புள்ளிகள் குறைந்து 36,598.05 ஆகவும் வர்த்தகமானது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் கடந்த 3 நாட்களில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக பங்குதாரர்களின் பணமிழப்பு ரூ. 6,80,441 கோடியாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அதன் இழப்புகளை தொடர்ந்து, வியாழன் அன்று மீண்டும் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 60,000-நிலைக்கு கீழே முடிந்தது.