இன்று காலை 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 61,096 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 397.48 புள்ளிகள் அதிகரித்து 61,014.37 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 114.65 புள்ளிகள் அதிகரித்து 18,170.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 277.40 புள்ளிகள் அதிகரித்து 38,719.60 ஆகவும் வர்த்தகமானது.
கோவிட்-19ன் புதிய ஒமிக்கிரான், இந்தியாவில் தடுப்பூசி கவரேஜ், அமெரிக்க பெடரல் ரிசர்வின் காலக்கெடு, பணவீக்கம், வீட்டிலிருந்து வேலை செய்வது, மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஆகியவை 2021 ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகளை வடிவமைத்தன. உலகளாவிய சந்தைகளிடையே இந்தியாவின் பங்குகள் சிறந்த செயல்திறன் கொண்டவை. அவைகள் புதிய சாதனைகளைப் படைத்தன. இந்திய நிறுவனங்கள் சாதனை தொகையை உயர்த்தியதன் மூலம் முதன்மை சந்தையில் பெரும் பங்கு வகித்தது.