பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மந்தநிலை காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை, சீர்குலைந்த விநியோக சங்கிலி, சந்தை அணுகல் இல்லாமை போன்ற காரணிகள் நாடு முழுவதும்...