இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின்...