எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) இன் தகவல்களின்படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மார்ச் 1-ந் தேதியன்று ஒரு பீப்பாய்க்கு USD 102 க்கு மேல் உயர்ந்தது.
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம்...