ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்து வேகமாக வளர்ந்து வருகிறது.
ஒமைக்ரான் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, நிதிநிலை குறியீடுகள் மற்றும் நிதித்துறை, மருத்துவத்துறை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தற்போது, மூலத்தில் 30 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், TDS விகிதத்தில் குறைப்பை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.