ஒரு சினிமா பாக்கப் போறீங்க, நல்ல மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், பாப்கார்ன், கோக்னு குடும்பத்தோட என்ஜாய் பண்றீங்க, மினிமம் ஒரு 1000 ரூபாய்ல இருந்து 1500 ரூபாய் வரைக்கும் செலவாகுமா? தீபாவளி, பொங்கலுக்கு, பொறந்த நாளுக்குன்னு விலை உயர்ந்த டிரஸ் வாங்குறீங்க? ஒரு வருஷத்துல ஒரு ரெண்டு தடவ இந்த மாதிரி செலவுகள கொஞ்சம் கொறைச்சுக்கிட்டாப் போதும் அந்த செலவுல உங்க வாழ்க்கையைத் தாண்டி உங்க குடும்பத்தைப் பாதுகாக்கிற ஒரு டெர்ம் இன்சூரன்ஸை வாங்க முடியும்.
நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.