உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அதன் தளர்வான கொள்கையை பராமரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் போது வசூலிக்கும் விகிதமாகும். ரெப்போ விகிதத்தில் ஒரு சதவிகித குறைப்பு என்பது வணிக வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் முடிகிறது.