புதிய அட்டவணைப்படி, அழைப்பு, அறிவிப்பு, காலப் பணம் காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் , அரசு பத்திரங்களில் சந்தை ரெப்போ - காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையிலும், அரசுப் பத்திரங்களில் ட்ரை பார்ட்டி ரெப்போ - காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும், வணிகத் தாள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் - காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ - காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் போது வசூலிக்கும் விகிதமாகும். ரெப்போ விகிதத்தில் ஒரு சதவிகித குறைப்பு என்பது வணிக வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் முடிகிறது.
அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் உள்ளிட்ட நிதி விகிதங்களை உயர்த்தவில்லை. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்படும்...