வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
தனது வணிகத்தில் ஏற்படும் அபாயங்களால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு வங்கி போதுமான மூலதனத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, வைப்பாளர்கள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களிடமிருந்து கடன் வாங்கிய பணம் பாதிக்கப்படாமல் இருப்பது. RBL வங்கியின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி, வங்கி நன்கு மூலதனத்தில் உள்ளது மற்றும் வங்கியின் நிதி நிலை திருப்திகரமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
டிசம்பர் 2020ல், தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற தற்கொலைகளுக்குப் பிறகு ஹைதராபாத் காவல்துறை, டிஜிட்டல் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்ட ஏழு பேரைக் கைது செய்தது. இதன் விளைவாக 423 கோடி ரூபாய் மதிப்புக்...
இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே...
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும்...