உக்ரைன் மீது போர் தொடுத்துள் ளரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நெருக்கடியை சமாளிக்க எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.