கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று(08.03.2022) உலக மகளிர் தினத்தையொட்டி தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது. இதன் காரணமாக எண்ணெய் விலை 2008 –ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக உயர்ந்தது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.