டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.