இந்தியா முழுவதும் Swiggy, Zomato ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்று, உணவகங்களில் உணவுகளை வாங்கி சென்று, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகம் செய்து வருகின்றன.
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிளிங்கட் (க்ரோஃபர்ஸ்) நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வாங்குவதற்காக 100 மில்லியன் டாலர்களை (ரூ. 745 கோடி) முதலீடு செய்த நிறுவனம், கடனுக்கான முக்கிய விதிமுறைகளை முடிவு செய்வதற்கும் உறுதியான ஆவணங்களைச் செயல்படுத்துவதற்கும் அதன் இயக்குநர் குழு, நிர்வாகத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறியது.
சமீபத்திய நிதி திரட்டல், இன்ஸ்டாமார்ட்டில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அதன் முக்கியத் தளமான உணவு விநியோகப் பிரிவில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.