நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.
பெரும்பான்மையான இந்தியர்கள், நடுத்தர வயதில் குடும்பம், குழந்தைகள் என்று செலவுகள் வருமானத்தை விழுங்கி பற்றாக்குறை நிகழத் துவங்கும் போதுதான் சேமிப்பு அல்லது காப்பீடு போன்ற விஷயங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வருகிறது. உங்கள்...