இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இது உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதில், ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூட Infosys முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தரும் கூகுள் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.