நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.
2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.