எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.
ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்க மஸ்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க இருக்கிறார் என்றும், இந்த சந்திப்பின்போது டெஸ்லா...