வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.