மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மந்தமான கிராமப்புற தேவைகள், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு, விலை உயர்வு, பணவீக்கம் , இலங்கை நெருக்கடி போன்ற காரணங்களால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.