அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக் காலத்தை விட 10 நாட்கள் கூடுதலாக இருப்பதாகவும் நிர்வாக இயக்குநர் ஆங்ஷு மல்லிக் கூறினார்.