ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.
மைக்ரோசாப்ட் கேமிங் டெவலப்பர், ஆக்டிவிஷன் ப்ளிஸார்டை 69 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியதை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் புதன்கிழமை விமர்சித்தார். ஏழை நாடுகள் கடன்களை மறுசீரமைக்கவும், COVID-19 மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் இது தேவையா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.