அனில் அம்பானியின் Reliance Capital-ஐ கைப்பற்ற Tata AIG மற்றும் Adani குழுமங்கள் விண்ணப்பத்துள்ளன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அனில் அம்பானியின் Reliance Capital நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அதிக அளவிலான கடனில் மூழ்கி உள்ளதாலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், IBC சட்டவிதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் விற்பனைக்கு வந்தது.
இதையடுத்து அனில் அம்பானியின் தலைமையில், ADA Group4-ன் கீழ் இயங்கி வரும் மிக முக்கிய நிறுவனமான Reliance Capital நிறுவனத்தை வாங்க விரும்புபவர்கள் மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது மார்ச் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை வாங்க TaTa AIG Group, Adani Finserv, ICICI Lombard, HDFC Ergo, Bandhan Financial Holdings, Cholamandalam Investments, YES Bank, Oak Tree Capital, Black Stone, New Quest, TPG Capital, Zurich, Nippon Life Insurance, Ares SSG Capitals, Arpwood Partners உள்ளிட்ட மொத்தம் 54 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரிலையன்ஸ் கேப்பிட்டலை மொத்தமாக கைப்பற்றவும், ஒருசில ரிலையன்ஸ் கேப்பிட்டலின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துணை நிறுவனங்களை வாங்குவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளன. போட்டியில் வெல்லப் போவது யார் என்பது விரைவில் தெரிந்து விடும்.