இந்தியாவில் பல விதமான பொருட்களை விற்கும் டாடா நிறுவனம் , புதுப்புது பொருட்களை விற்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 2023ம் நிதியாண்டில் அதிக பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது டாடா நிறுவனம் முதல் பாதி ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிதாக 3 பொருட்கள் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாடா டீ கோல்ட்,டாடா உப்பு உள்ளிட்ட நிறுவனங்களை மாற்றியமைக்க பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் பணிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்த அனைத்து. பணிகளையும் செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உப்பு, காப்பி,டீ விற்று வந்த டாடா நிறுவனம்,பருப்பு, நறுமனப் பொருட்கள், குளிர்பானங்களையும் டாடா அறிமுகப்படுத்தி வருகிறது. புரதச்சத்து சார்ந்த தின்பண்டங்களை டாடா அறிமுகப்படுத்தும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறது. புதிய சாப்பிடும் பொருட்கள் அறிமுகப்படுத்த உள்ளதால் அந்த நிறுவன பொருட்கள் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருகிறது. தற்போது உள்ளதைவிட இருமடங்கு வரை அடுத்த 3 ஆண்டுகளில்
பொருட்கள் விற்பனை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது பொருட்களை அறிமுகப்படுத்தும் டாடா கன்சியூமர்ஸ்….
Date: