டாடா குழுமம் அதன் சூப்பர் அப்ளிகேஷனான ‘டாடா நியூ”-வை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
பிக் பாஸ்கெட். 1எம்ஜி,க்ரோமா. விமான முன்பதிவு சேவைகள் மற்றும் டாடா கிளிக் உள்ளிட்ட அனைத்தையும் இது ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது.
டாடா குழுமம் 2022 மற்றும் 2023 சீசன்களுக்கான ஐபிஎல் விளம்பரதாரராக உள்ளது. உலகின் மிகப் பெரிய ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியாக இருப்பதால், இந்த நிகழ்வின் போது டாடா இந்த செயலியின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tata Neu பல வெளியீட்டு காலவரிசைகளைத் தவறவிட்டது. கடைசியாக கடந்த ஆண்டு தீபாவளியின் போது இருந்தது.
சூப்பர் செயலியில் பல்வேறு இயங்குதளங்களை ஒருங்கிணைப்பதில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள், இந்த ஆண்டு குறைந்தபட்சம் மார்ச் மாதத்திற்கு வெளியீட்டு காலக்கெடுவைத் தள்ளிவிட்டதாக டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், Tata Neu சேவைகள் வணிகத்தை தலைமை தாங்க முன்னாள் Ola COO கௌரவ் போர்வாலை நியமித்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. போர்வால் இதற்கு முன்பு ஓலாவின் உணவு விநியோக வணிகத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார்.