டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் நன்றாக இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் கோபிநாதன், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
Tata Consultancy Services நிறுவனம் 2030-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்டும் வகையில் செயலாற்றி வருவதாக ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய மாடலின் ஒரு பகுதியாக, பெறுதல், பராமரித்தல், வளர்தல் மற்றும் மாற்றுதல் ஆகிய நான்கு முதன்மை இலக்குகள் மூலம் நாங்கள் செயல்படுகிறோம் என்று கோபிநாதன் டிசிஎஸ்ஸர்களுக்கு அனுப்பிய மின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மின்னஞ்சலில், கோபிநாதன் டிசிஎஸ்ஸர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக வாழ்த்துகளை தெரிவித்தார். டிசிஎஸ், FY22 இல் 1,00,000 புதியவர்களை பணியமர்த்தியது என்றும் கூறினார். இதன்மூலம் அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை 5,92,195 ஆக உயர்த்தியது.