ஏஎம்டி, ஜேபிஎல், என்விடியா, டெல், லெனோவா மற்றும் ஃபிட்பிட் ஆகியவற்றிற்கான பான்-இந்திய விநியோகஸ்தரான RP டெக் (ராஷி பெரிஃபெரல்ஸ் பிரைவேட் லிமிடெட்), ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 1,000 கோடி வரை நிதி திரட்ட, திட்டமிட்டு இருக்கிறது.
1989 இல் கிருஷ்ணா சௌத்ரி மற்றும் சுரேஷ் பன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்ட RP டெக் இந்தியாவின் ஐந்து பெரிய தகவல் தொழில்நுட்ப விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களில் ஒன்றாக இருக்கின்றனர்.
இந்த நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட சிறந்த உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டுகளுடன் செயல்படுகிறது. நாடு முழுவதும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்களுக்கு சேவை செய்யும் வகையில், 50 கிளைகள் மற்றும் 50 சேவை மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.
FY21-ல், RP டெக் 5 ஆயிரத்து 865.59 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. முந்தைய நிதியாண்டில் இதன் வருவாய் 3 ஆயிரத்து 918.42 கோடி ரூபாயாக இருந்தது. ஆகஸ்ட் 31, 2021 தேதியிட்ட கிரிசில் நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங் அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் கிடைத்த 42.16 கோடி ரூபாய் லாபத்திலிருந்து பல மடங்கு உயர்ந்து, இந்த நிதியாண்டில் 122.31 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.