சுரங்கத் துறை நிறுவனமான “டேகா இண்டஸ்ட்ரீஸ்” தனது ஐபிஓ விற்பனையை இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. டிசம்பர் 3 ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் 443 ரூபாயிலிருந்து 453 ரூபாய் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 33 பங்குகளையும், அதிகபட்சமாக 33ன் மடங்குகளிலும் வாங்கலாம்.
ஜூன் 30 இல் முடிந்த வருடாந்திர அறிக்கையின்படி இந் நிறுவனம் 179.38 கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறது. நிகர லாபமாக 11.88 கோடியை பெற்றிருக்கிறது. டேகா, உலகின் இரண்டாவது பாலிமர் மில் லைனர் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். டேகா இண்டஸ்ட்ரீஸ் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய எம்.எம் குழுமம், இது சுரங்க, கனிமம், பொருள் கையாளுதல் மற்றும் போக்குவரத்து தொழில்களை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.