பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட இறப்பு விகிதங்களின் தாக்கம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் “டேர்ம் இன்சூரன்ஸ்” கட்டணங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளனர். இதில் சில நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் விலையை உயர்த்தக் கூடும். சிலர் ஜனவரி மாதத்தில் விலையை உயர்த்தக் கூடும். இந்த விலை உயர்வு 25 – 40 சதவீதம் வரை இருக்கலாம் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.
பிரீமியம் உயர்வு இருந்தபோதிலும் காப்பீட்டாளர்கள், வல்லுனர்கள் , உயிரிழப்பு குறித்த நுகர்வோரின் விழிப்புணர்வைக் கருத்தில் கொண்டு அத்தகைய சேவைகளுக்கான தேவை குறையாது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் டேர்ம் பிளான்களின் விலை உலகிலேயே மிகவும் குறைவு. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக அவை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.