அமெரிக்காவில் உள்ள சாலைகளில் ஓட்டுநரே இல்லாமல் டெஸ்லா மோடில் கார்கள் பயணிப்பது பல ஆண்டுகளாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாக உள்ளது. இந்த சூழலில் தானியங்கி வாகனத்தில் சிறு பழுது உள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பிரச்னை உள்ள 3.62 லட்சம் கார்களை திரும்பப்பெற டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வளைவான சாலையில் நேராக செல்வதாக எழுந்த புகாரை அடுத்து அதனை சரிசெய்யும் பணிகளில் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் இந்த பழுது போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது. model 3,x,y,s ஆகிய கார்களில் இந்த பிரச்னை உள்ள கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன. 2016 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் பழுதுநீக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல் 15ம்தேதி வெளியாக உள்ள புதிய அப்டேட்டின் மூலம் இதனை சரிசெய்ய பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. 2021ம் ஆண்டு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த தானியங்கி மென்பொருளால் ஏற்பட்டதாக வழக்கு நடைபெற்று வருகிறது. இலவசமாக மென்பொருள் கிடைக்குமா இல்லை பணம் செலுத்த வேண்டுமா என்ற தகவல் வெளியாகவில்லை. இப்போதாவது பிரச்னையை சரிசெய்ய டெஸ்லா முன் வந்ததே என்று ஜார்ஜ் மேசான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் டெஸ்லாவை பாராட்டியுள்ளனர்.
3.62 லட்சம் கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா!!!
Date: