பாகிஸ்தானில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட அதிக விலைக்கு வாங்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 300அடிப்படை புள்ளிகள் குறைத்து அந்நாட்டு மத்திய வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருக்கும் எல்லா வாய்ப்புகளையும் பறிகொடுத்துவிட்ட பாகிஸ்தானுக்கு உதவ இருக்கும் ஒரே அமைப்பு சர்வதேச நாணய நிதியம் மட்டுமே. இந்த சூழலில் அவர்கள் பணம் தரவேண்டுமெனில் சில விதிகளை பாகிஸ்தான் அரசு பின்பற்றியாகவேண்டும். அதன்படியே புதிய உயர்த்தப்பட்ட கடன்களின் விகிதம் உள்ளது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியில் ஒருவர் கடன் வாங்கினால் 20%வட்டியாக செலுத்த வேண்டும், இந்த அளவு என்பது பாகிஸ்தானின் வரலாற்றில் 1996ம் ஆண்டுக்குபிறகு மிகவும் அதிகமாகும். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடன்களின் விகிதம் 200 அடிப்படை புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக 300 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தது அந்நாட்டு மக்களை அதிர வைத்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி முதல் அந்நாட்டு கடன்களின் வட்டி விகிதம் 1025 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது.அந்நாட்டு வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தும் நாணய கொள்கை கூட்டம் ஏப்ரல் 27ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட சூழலில் முன்கூட்டியே வரும் ஏப்ரல் 4ம் தேதியே நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து கிடக்கிறது.அந்நாட்டு கடன் பத்திரங்களும் கணிசமாக வீழ்ந்துள்ளன. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மேலும் 6.66விழுக்காடு சரிந்து 285 ரூபாயாக உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு சரிந்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தானில், தற்போதுள்ள வெளிநாட்டு பணம், இன்னும் 3 வாரங்களை சமாளிக்க மட்டுமே உள்ளன. பாகிஸ்தானின் நெடுநாள் நண்பரான சீனா மட்டுமே 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது. சீனாவும் உதவாமல் போயிருந்தால் இலங்கையில் ஏற்பட்ட அதே அளவு பாதிப்பை பாகிஸ்தான் இந்நேரம் சந்தித்து இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.