வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பிபிசி நிறுவனத்தில் வரவு செலவு கணக்குகள் சரியாக உள்ளதா என்ற இந்திய வருமான வரித்துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பிபிசி செய்தி நிறுவனத்தின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. வருமான வரித்துறையினர் செய்த ஆய்வு குறித்து முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் விரைவில் இந்த புகார்கள், ஆய்வுகள் சரியாகிவிடும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது. 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்டிருந்த சூழலில் பலமுறை ஐடி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தும் பிபிசி நிறுவனம் பதில் தராததால் இந்த திடீர் ஆய்வு நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் பொதுத்துறை நிறுவனம் போன்று இயங்கி வரும் பிபிசி நிறுவனம் ,சுதந்திரமாக பத்திரிகை தரவுகளை வெளியிட்டு வரும் அமைப்பாக உள்ளது. இதற்கு உதாரணமாக அந்நாட்டு அரசியல் சூழலையும் மிகச்சிறப்பாக ,சார்பின்றி தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன், தேவையற்ற புகழ்ச்சிகளையும் தவிர்த்து வருகிறது. அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதை பிபிசி செய்து வருவதாகவும் இதனை தடுக்க நினைக்கும் மோடி அரசுக்கு கண்டனங்கள் என்று உலகின் பல நாடுகளும், மனித உரிமை அமைப்புகள், பத்திரிகை நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பிபிசி நிறுவனம் சுதந்திரமாக செயல்படுவதையும், இந்திய அரசு அழுத்தம் தருவதையும் பிரிட்டன் அரசாங்கம் கண்காணித்து வருகிறது.
பிபிசி அலுவலகத்தில் நடப்பதை உற்று நோக்கும் பிரிட்டன் அரசு !!!
Date: