ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை வரைவு படுத்துவதில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டியை அளித்துள்ளார். அதில் பட்ஜெட் தயாரிக்கும் போது, பொருளாதாரம் மற்றும் மக்களை பற்றி கருத்தில் கொண்டே பிரதமர் செயல்படுவதாக கூறியுள்ளார். ஒவ்வொரு முறை பட்ஜெட் தயாரிக்கும் போதும், பட்ஜெட் பற்றி பிரதமருடன் காரசாரமாக 3 அல்லது 4 முறை கடுமையான விவாதம் இருக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வளர்ச்சியின் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்தில் முறைப்படுத்த பட்ஜெட் உதவும் என்று கூறியுள்ள நிதியமைச்சர்,பிரதமரின் அறிவுறுத்தலால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கிடைக்கும் என்று தெரிவித்தார். நாட்டின் வெளிநாட்டு பண கையிருப்பு 8 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன்,உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமருக்கு இதில் முக்கிய பங்கு உண்டு…சொல்கிறார் அம்மையார்
Date: