இந்தியாவின் பொருளாதாரத்தையே முடிவு செய்வதில் ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு. இந்த வங்கியின் ஆளுநராக தற்போது சக்தி காந்ததாஸ் இருக்கிறார். இவருக்கு அடுத்த பதவியில் இருப்பது துணை ஆளுநர் பதவி. இந்த பதவிக்குதான் ஆட்களை இந்திய அரசு தேடி வருவதாக விளம்பரம் செய்துள்ளது. வங்கிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் இந்த பதவியில் தற்போது எம்.கே. ஜெயின் இருக்கிறார்.இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைய இருக்கிறது. இவருக்கு பதிலாக புதிதாக தேர்வாக இருப்பவர் அந்த பதவியில் அடுத்த 3 ஆண்டுகள் நீடிப்பார். இந்த பதவிக்கு அப்படி என்னதான் தகுதி என்றால், குறைந்தது 15 ஆண்டுகள் வங்கித்துறையிலும்,நிதி சந்தை செயல்பாடுகள் துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். கார்பரேட் வங்கித்துறை, திவால் விதிகள் , சந்தய அபாயம் மற்றும் சட்டம் குறித்து அனுபவம் இருக்கவேண்டும் என்பது முக்கிய தகுதிகளாக மத்திய அரசின் நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு ஜுன் 22ம் தேதி கணக்குப்படி விண்ணப்பதாரருக்கு 60 வயதுக்கு குறைவாகவே இருக்க வேண்டும். இந்த பதவிக்கு தேர்வாகும் நபருக்கு சம்பளமாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10ம்தேதியாகும்.நிதி அமைச்சகத்தின் நிதி சேவைப்பிரிவில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இயலும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் பேங்க்ல வேல காலியா இருக்காம்!!!
Date: