இந்திய பொருளாதார சிக்கல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அப்படி அவர் என்ன எச்சரித்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்தி காந்ததாஸ்,தனியார் கிரிப்டோ கரன்சிகளால் அடுத்த நிதிசிக்கலை இந்தியா சந்திக்கும் என்றார்.
இந்த வகை கிரிப்டோகரன்சிகளுக்கு எந்த பெரிய மதிப்பும் இல்லை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர், இந்த வகை கிரிப்டோ கரன்சிகள் நிதி நிலைத்தன்மையை வெகுவாக பாதிக்கும் என்றும் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
துவக்கம் முதலே கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில் கிரிப்டோ சார்ந்த வரிகளில் 30 விழுக்காடுக்கும் அதிகமாக வைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இவங்களாலதான் அடுத்த சிக்கலே …!!!!
Date: