தைரோ கேர் நிறுவனத்தை டாக்டர் ஆரோக்கிய சாமி வேலுமணி 1996முதல் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது ஆடு வளர்ப்பு சார்ந்த தொழிலில் குறைந்தது 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய டிவிட்டரில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் 10வயதில் ஆடு வளர்க்கும் தொழிலில் தோற்று விட்டதாக கூறியுள்ளார். ஆடு வளர்ப்பு தொடர்பான வணிகம் பற்றி அறிந்துகொள்ள சிக்க பல்லார்பூர் சென்ற போது பல நாட்களாக வளர்ந்த ஆடுகளை சிலர் விற்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த வேலுமணி முதலில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் பின்னர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். தை ரோ கேர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் வேலுமணி, அண்மையில் பார்ம் ஈஸி நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.