உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 40மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதன்படி நேற்று வானுயர கட்டிடங்கள் 9 நொடிகளில் தகர்ந்தது. கட்டிட இடிப்புக்கு 3ஆயிரத்து 700கிலோ வெடிமருந்து பயன்படுத்தியது. இது தொட ர்பாக சூப்பர் tech நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கட்டிடத்தை இடிக்க 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறபடுகிறது. நேற்று த்கர்க்கப்பட்ட மொத்த மதிப்பு 700 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதி மீறலும் நடக்கவில்லை என்றும் இதுவரை 70 ஆயிரம் வீடுகள் கட்டியுள்ள தங்கள் நிறுவனத்தின் எந்த வருங்கால திட்டங்களும் பாதிக்காது என்றும் சூப்பர் tech நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.
இடிக்கப்பட்ட கட்டிடங்களில் தங்கள் நிறுவனம் 8லட்சம் சதுர அடியை பயன்படுத்தி உரிய விதிப்படி அனைத்து பணிகளை. செய்ததாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி வீடு புக் செய்தவர்களுக்கு 12%வட்டியும் சேர்த்து தர உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய தகர்ப்பில் அருகாமை கட்டிட அமைப்பு களுக்கு 100 கோடி ரூபாய் காப்பீடு செய்யப்பட்டதாக சூப்பர் டெக் நிறுவனம் சொல்கிறது..