ட்விட்டரை வாங்குவதற்கான தனது $44 பில்லியன் ஒப்பந்தத்தை மீறியதற்காக எலோன் மஸ்க் மீது Twitter Inc வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் மிகப்பெரிய சட்ட மோதல்களில் ஒன்றாகும்,
ஸ்பேம் கணக்குகள் தொடர்பான கூடுதல் தகவல்களை ட்விட்டர், மஸ்க்குடன் பகிர்ந்து கொள்ளவில்லை, ஏனெனில் ட்விட்டரை அவர் கையகப்படுத்தாமல் விட்டால் பிறகு ட்விட்டருக்குப் போட்டியாக அதைப்போலவே ஒரு தளத்தை உருவாக்குவார் என்று அஞ்சியது.
மஸ்க் மேற்கோள் காட்டிய காரணங்களை தகுதி இல்லாத ஒரு ‘சாக்குப்போக்கு’ என்று அழைத்த ட்விட்டர், விலகிச் செல்வதற்கான அவரது முடிவு பங்குச் சந்தையில் சரிவுடன் தொடர்புடையது என்று கூறினார்.
தனியாகத் தாக்கல் செய்த மனு ஒன்றில் ட்விட்டர், செப்டம்பர் நடுப்பகுதியில் நான்கு நாள் விசாரணையை திட்டமிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.