Uber நிறுவனம் ஸொமேட்டாவில் இருந்த அதன் 7.78 சதவீதப் பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்று வெளியேறியது. பிஎஸ்இ பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நிறுவனம் மொத்தமாக 61,21,99,100 பங்குகளை ரூ.50.44 க்கு விற்றது.
ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், ஃபிடிலிட்டி சீரிஸ் எமர்ஜிங் மார்கெட்ஸ் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் நிறுவனம் 5.44 கோடி பங்குகளை ரூ. 50.26க்கு கொடுத்து வாங்கியது என்று பங்குச் சந்தை தரவு காட்டுகிறது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஒரு பங்கு ரூ. 50.25 என்ற விலையில் 4.5 கோடி பங்குகளை வாங்கியது,
2020 ஆம் ஆண்டில் பங்கு பரிவர்த்தனையில் உபெர், ஸொமாட்டோவில் தனது பங்கைப் பெற்றது.