Tata Steel Limited நிறுவனம் தனது நிலக்கரி தேவைக்காக மாற்று சந்தையை நாட திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், உலக பொருாளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய், தங்கம், எஃகு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 45 மில்லியன் டன் அளவுக்கு உலோக இறக்குமதிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tata Steel Limited தனது நிலக்கரி தேவைக்கு 10 முதல் 15 சதவீதம் வரை ரஷ்யாவை நம்பியே உள்ளது. தற்போது உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியால், டாடா ஸ்டீல்ஸ் லிமிடெட் மாற்று சந்தைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஐரோப்பிய நடவடிக்கைகளுக்காக டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் வட அமெரிக்காவிலிருந்து அதிகம் வாங்கும் நிலையும் உருவாகியுள்ளது. டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் 2022-23-ம் நிதியாண்டில் ஐரோப்பாவின் ஏற்றுமதி 1 மில்லியன் டன்னையும் கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்திய செயல்பாடுகள் வாயிலாக மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், இந்த நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஏற்கனவே உச்சத்தில் உள்ள பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.